நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்கள், இரண்டு முழுநீளப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் கவின்சுரேஷ் நாமக்கல் அருகே பரமத்திவேலூர்க்காரர். பள்ளியில் படிக்கும்போதிருந்தே ஓவியத்திலும் புகைப்படக்கலையிலும் ஆர்வத்துடன் இருந்தவர். தன் கலை ஆர்வம் தந்தையிடமிருந்து வந்தது என்கிறார். வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்து பல இடங்களில் பணியாற்றி, திரைப்பட ஒளிப்பதிவாளராக மாறியபின்னரும் புகைப்படங்கள் மீது ஆர்வத்தை இழக்கவில்லை. ‘நான் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் உயிரோட்டம் இருக்கவேண்டும் என்று நினைப்பேன். அது இல்லாமல் இருக்கும் படங்களை நிராகரித்துவிடுவேன்' என்கிற சுரேஷ், பத்திரிகைகளுக்கும் படங்கள் எடுத்தவர். அவரது புகைப்படச் சேகரத்திலிருந்து சில இங்கே.
ஜூலை, 2015.